பாவையும், பயணமும்! ( சொல்லாத காதல் பயணம்)
பெங்களூரின் அந்த பரபரப்பான இரவு நேரம். வேலை இன்டர்வியூ முடிந்து, மனதிற்குள் கவலையான உணர்வுகளுடன் கோயம்புத்தூர் திரும்பக் காத்துக்கொண்டிருந்தாள் மது. அந்தப் பெரிய நகரத்தின் மொழி அவளுக்குப் புரியவில்லை, பாதைகளும் புதியவை. ஆம்னி பஸ் ஸ்டாண்டிற்குச் செல்ல இன்னும் சில லோக்கல் பஸ்களை மாறிச் செல்ல வேண்டும் என்பது மட்டுமே அவளுக்குத் தெரிந்திருந்தது. டிக்கெட் புக் செய்த இடத்தின் முன், இருட்டிய அந்த நேரத்தில் தனியாக நின்று தவித்துக் கொண்டிருந்தாள். அவளைக் கடந்து சென்ற சில ஆண்களின் விநோதமான பார்வைகளும், அருகில் நெருங்க முயன்றதும் அவளுக்குள் பயத்தை ஏற்படுத்தின. டாக்ஸியில் செல்ல போதிய பணமும் இல்லை, பஸ்ஸில் மாறிச் செல்ல மொழி தெரியவில்லை. 'என்ன செய்வது?' என்று திகைத்து நின்ற அந்த நொடியில் தான், அவளுக்கு அருகில் வந்தான் கார்த்திக். அவனும் கோயம்புத்தூருக்குத் தான் செல்வதாகக் கூறி, தமிழில் பேசிய அந்த ஒரு வார்த்தை அவளுக்குள் பெரும் நம்பிக்கையைத் தந்தது. ஏதோ பல நாள் பழகியது போல் அவன் அங்கு நடித்தான். காரணம் அந்த ஆண்களையும் அவளது சூழ்நிலையும் முகத்தில் இருந்த பயத்தையும் சட்டென்ற...