"எண்ணமெல்லாம் என்னவளே"
முன்னுரை :- காதல் என்பது, வாழும் காலத்தில் மட்டும் பூப்பதில்லை; அது நினைவுகளாகி நம் மூச்சுக்காற்றில் கலந்து காலத்திற்கும் வாழக்கூடியது. சில மனிதர்களின் வருகை மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் அப்படிப்பட்ட ஒரு ஆழமான அன்பையும் அந்த அன்பிற்கு விதி வைத்த சோதனையும் தான் இந்த கதை பேசுகிறது. "என் டைரி" யில் இருந்து அனுபவத்தையும் வலியையும் தழுவிய இந்த உண்மையான அன்பின் வலி பேசும் இந்தச் சிறிய முயற்சி உங்கள் இதயதைத் தொடும் என்று நம்புகிறேன். தொடங்கிய பயணம்:- "வாழ்க்கை நமக்குத் தரும் மிகப்பெரிய பரிசு அன்பு. ஆனால் அதே அன்பு சில நேரங்களில் தாங்க முடியாத வலியையும் பரிசளிக்கும்" சில மனிதர்கள் நம் வாழ்க்கையில் மிகச் சாதாரணமாாக நுழைவார்கள் ஆனால் அவர்கள் விட்டுச் செல்லும் நினைவுகள் நம் வாழ்நாள் முழுமைக்கும் அழியாத வடுகளாக மாறிவிடும் கடல் அலைகள் கரைக்கு வந்து செல்வதைப் போல; அவள் நினைவுகள் என் மனதைத் தொட்டுக் கொண்டே இருக்கும். "வாசு - விதியின் ஆட்டத்திற்கு முன்பாக" 10 ஆம் நம்பர் பேருந்தும்; ரெட்டை ஜடை அவளும் (2006) அப்போதுதான் மொபை...