எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்த சம்பவம்: என்ன கூறுகிறது ஓலா?

கடந்த சில தினங்களுக்கு முன்பு புனேவில் பரபரப்பை ஏற்படுத்திய ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்த சம்பவத்திற்கு ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் தற்சமயம் விற்பனையில் உள்ளன. இந்த நிலையில், கடந்த மார்ச் 26ஆம் தேதி புனேவில் சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் நாடு முழுவதுமே அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
முதலில் இதற்கான காரணம் புலப்படவில்லை, பின்னர் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கும் பேட்டரியினால் இந்த தீ உருவாகி இருக்கலாம் என கூறப்பட்டது. ஆக மொத்தத்தில் இந்த சம்பவம் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பயன்படுத்தி வருபவர்கள் மத்தியில் ஒருவித பயத்தை ஏற்படுத்தியுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
 அதுமட்டுமின்றி, புதியதாக எஸ்1 ஸ்கூட்டரை வாங்க தயாராகி வந்தவர்களும் இந்த சம்பவத்தால் தயக்கமடைய துவங்கியுள்ளனர்
இந்த தயக்கங்களை போக்கவும், இந்த பிரச்சனையை சரி செய்யும் பொருட்டும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 'புனேவில் எங்களின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றில் நடந்த சம்பவத்தை நாங்கள் அறிவோம். மேலும், அதன் மூல காரணத்தை தெரிந்துக்கொள்ள விசாரித்து வருகிறோம். இதன் மூலம் கொண்டுவரப்பட உள்ள அப்டேட்களை விரைவில் பகிர்ந்து கொள்வோம்.
இந்த சம்பவத்தை முக்கிய பிரச்சனையாக கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளோம். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதுக்குறித்த விபரங்களை வரும் நாட்களில் வெளியிடுவோம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓலாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்தவரையில், இது எஸ்1 & எஸ்1 ப்ரோ என்கிற இரு விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் எஸ்1 மாடல் ரூ.1 லட்சம் என்கிற அளவிலான எக்ஸ்-ஷோரூம் விலையிலும், எஸ்1 ப்ரோ மாடல் ரூ.1.30 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் எஸ்1 வேரியண்ட்டில் 2.98kWh திறன் கொண்ட பேட்டரி தொகுப்பும், எஸ்1 ப்ரோ மாடலில் 3.97kWh பேட்டரி தொகுப்பும் வழங்கப்படுகிறது.
Source -
Online 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்