தென் மாவட்டங்களில் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று/ தோரண மலை முருகன் கோயில்/ 1000 வருடம் முந்தைய மருத்துவமனை/தேரையர் சித்தர் வாழ்ந்த மலை






வணக்கம் நண்பா.

நான் உங்க MK!!



தென்காசி மாவட்டம்,
தென்காசி to கடையம் செல்லும் வழியில், மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது.
1000 படிகளை கொண்டது.

தென் பொதிகை மலையில் தான் அகத்தியர் வாழ்ந்து வந்தார்,
அவரின் சீடர்களின் ஒருவர் இந்த தேரையர் சித்தர்..
அவர் இங்கு வாழ்ந்து ஜீவசமாதி அடைந்த இடமாக இது கருதப்படுகிறது.
ஆயிரம் வருடங்களுக்கு முன்பு
மருத்துவமனையாக இந்த இடம் இருந்ததாக கூறப்படுகிறது,
உலகின் முதல் கபால அறுவை சிகிச்சை நடந்த இடமாகவும் இது கருதப்படுகிறது.
முன்னொரு காலத்தில் மன்னர் ஒருவரின் தலைக்குள் தேரை அதாவது தவளை புகுந்து விட்டது.
அதை மிக எளிதாக அந்த சித்தர் மண்டையை திறந்து அருகில் ஒரு பானையில் நீருடன் வைத்தார்!
உடனே தவளை (தேரை) அந்த பானையில் குதித்து விட்டது,
பின்னர் அதை தைத்து விட்டார்!!

இதுவே உலகின் முதல் கபால அறுவை சிகிச்சையாக ஆன்மீக வாசிகள் கருதுகின்றனர்!!

தேரை எனப்படும் தவளையை எளிதாக வெளியேற்றியதால் தேரையர் சித்தர் என அழைக்கப்படுகிறார் என வரலாறு உண்டு!!


பொதுவாக இரு நதிகளுக்கு இடையே உள்ள கோவில் புனித தலமாக விளங்கும்!
இந்த மலையில் ராமநதி,ஜம்புநதி என இரு நதிகள் ஓடுகின்றன!!




இதுதவிர பல சுனைகள் இருக்கிறது.
மருத்துவத்திற்கான நீர் இந்த சுனையில் எடுக்கப்பட்டதாக கூறுகின்றனர்!!

இம்மலை க்கு அருகில் உள்ள முத்துமாலைபுரம் என்ற ஊரை சேர்ந்த பெருமாள் என்பவரின் கனவில் தோன்றி முருகன்
நான் தோரண மலை உச்சியில் உள்ள சுனையில் கிடைப்பதாகவும், என்னை வெளியில் எடுத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறினார்!!



மறுநாள் காலை அங்கு சென்று பார்த்தால் அங்கே சிலை இருந்தது!!
அதுவே தோரண மலை மூலவராக உள்ளார்..

சித்தர்களின் முதல் மை வாய்ந்த அகத்தியர் அவர் சீடர் தேரையர் சித்தர் வாழ்ந்த புனித தலமாக விளங்குகிறது..
.


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்