Activa எலக்ட்ரிக் scooter ஆ?!!!
இதன் சிறப்பு -
Battery Swappingஆப்ஷனோடு வர இருக்கிறது ஆக்டிவா. இப்போதைக்கு இந்தியாவில் ‘பவுன்ஸ்’ எனும் நிறுவனம்தான், தனது இன்ஃபினிட்டி ஸ்கூட்டருக்கு ஸ்வாப்பபிள் பேட்டரி வசதியை முதன் முதலாகக் கொடுத்திருக்கிறது. அதற்குப் பிறகு, ஹோண்டாதான் இந்தி வசதியைக் கொண்டு வரப் போகும் இரண்டாவது நிறுவனம்.
அதாவது, உங்கள் காலியான பேட்டரியைக் கழற்றி வைத்துவிட்டு, சார்ஜிங் ஸ்டேஷன்களில் உள்ள சார்ஜ் ஃபுல்லான பேட்டரியை மாற்றிக் கொண்டு கிளம்பலாம். இதனால், ‘வண்டி எவ்வளவு தூரத்தில் நிக்குமோ’ என்று கவலைப்படத் தேவையில்லை. ஸ்வாப்பபிள் பேட்டரி ஆப்ஷன் கொண்ட நிறுவனத்தில் இன்னொரு வசதி என்னவென்றால், ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நீங்கள் பேட்டரி இல்லாமலே வாங்கிக் கொள்ளலாம். பேட்டரிதான் ஒரு வாகனத்தின் பெரிய செலவு என்பதால், ஸ்கூட்டரின் ஆன்ரோடு விலை மிகக் கணிசமாகக் குறையும். உதாரணத்துக்கு, ஆக்டிவா எலெக்ட்ரிக்கை 1 லட்ச ரூபாய்க்கு பொசிஷன் செய்திருந்தால்… நாம் இதை பேட்டரி இல்லாமல் சுமார் 70,000 ரூபாய்க்குக்கூட வாங்கிக் கொள்ளலாம். கூடவே சப்ஸ்க்ரிப்ஷன் திட்டத்தோடும் வருகிறது ஹோண்டா.
அநேகமாக, ஆக்டிவா எலெக்ட்ரிக்கின் ரேஞ்ச் – சுமார் 150 கிமீ இருக்கும் அளவுக்கு இதில் பவர்ஃபுல் பேட்டரியைப் பொருத்த இருக்கிறதாம் ஹோண்டா. மற்றபடி வசதிகளைப் பொருத்தவரை டச் ஸ்க்ரீன், ஜியோஃபென்சிங், எல்இடி லைட்ஸ், ட்யூப்லெஸ் டயர்கள் போன்றவை இருந்தால்தான் இப்போதெல்லாம் மரியாதை. அதனால், காலத்துக்கு ஏற்ப சில பல தொழில்நுட்ப வசதிகளோடும் வர இருக்கிறது ஆக்டிவா எலெக்ட்ரிக். மற்றபடி இ-ஆக்டிவாவைப் பற்றித் தகவல்கள் எதையும் சொல்லவில்லை ஹோண்டா.
ஓலா, ஏத்தர், பவுன்ஸ், ஹீரோ, பஜாஜ் சேட்டக், டிவிஎஸ் ஐக்யூப் போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்குப் போட்டி காத்திருக்கு! ஆனால், இந்த இ–ஆக்டிவா சாலைகளுக்கு வர அடுத்த புத்தாண்டு ஆகும் என்கிறது ஹோண்டா.
Source- விகடன்

கருத்துகள்
கருத்துரையிடுக