உலகில் உலகில் மிகப்பெரிய 145 அடி முருகன் சிலை//MK TN BIKER TRAVEL//SELAM ATTUR MURUGAN TEMPLE

வணக்கம் நண்பா நான் உங்க MK
video on YouTube
உலகிலே மிகப்பெரிய முருகன் சிலை 145 அடி உயரம் உள்ள முருகன் சிலை
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புத்திர கவுண்டம்பாளையம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள 145 அடி உயரமுள்ள உலகிலே மிகப்பெரிய முருகன் சிலையை நோக்கி ஒரு பயணம்.
நாங்க எங்களுடைய பைக்கில் திருப்பூரிலிருந்து அங்கு சென்றோம்.
இப்போதைக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பத்துமலை முருகன் சிலை உலகிலேயே மிகப்பெரிய முருகன் சிலை ஆகும்.
ஆனால் தற்போது சேலம் ஆத்தூரில் உள்ள இந்த முருகன் சிலை அதைவிட ஐந்து அடி அதிகம் உள்ளதால் தற்போது உலகின் மிகப்பெரிய முருகன் சிலையாக இது கருதப்படுகிறது இதன் கட்டுமான பணிகள் நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது தற்போது 2022ஆம் ஆண்டு இது திறந்து வைக்கப்பட்டுள்ளது இந்த சிலையை மலேசியா பத்துமலை முருகன் சிலையை வடிவமைத்த தமிழகத்தைச் சார்ந்த திருவாரூர் தியாகராஜர் ஸ்தபதி தலைமையில் இதன் பணிகள் நடைபெற்றது.
இதில் கட்டுமானத்திற்காக முருகனின் ஆறுபடை வீட்டில் இருந்து மண் கொண்டுவந்து பூஜை செய்யப்பட்டது முருகன் சிலையின் அருகே லிப்ட் ஒன்று உள்ளது அதில் சென்று முருகனின் வேலுக்கு பால் அபிஷேகம் செய்யலாம்.
நேரடியாக முருகனுக்கு பின்னால் ஒரு சிறிய மலை உள்ளது அதில் பழைய முருகன் கோயில் ஒன்று உள்ளது அதற்கு போகும் வழியில் கொஞ்சம் கரடு முரடாக தான் உள்ளது; கோயிலில் இன்னும் கட்டுமான பணிகள் மீதமுள்ள தால்அது அனைத்தும் சரி செய்யப்படும் என்று நம்புகிறோம்.
இன்னும் சில கட்டுமான பணிகள் மீதம் உள்ளதால் குப்பைத்தொட்டிகள் நிழற்குடைகள் என நிறைய குறைகள் இன்னும் சரி செய்யாமல் இருக்கிறது.
ஒருவழியாக உலகில் மிகப்பெரிய முருகன் சிலையை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறோம் ஓம் சரவணபவ!
-
MK TN BIKER.
MANIKUMAR.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்