ஒன்று அல்ல இரண்டு அல்ல நம்ப முடியாத அளவுக்கு 28 புதிய சிறப்பம்சம் உடன்/ New TVS Apache RTR 160/180
TVS நிறுவனம் இன்று அப்பாச்சி ஆர்டிஆர் 160 மற்றும் 180 ஆகிய 2 பைக்குகளை அப்டேட் செய்து அறிமுகம் செய்துள்ளது.
இந்திய தயாரிப்பில் முதல் முதலில் ABS ( below 200cc) வாகனங்கள் அறிமுகம் செய்தது ,
முதல் முதலில் Ride mode அறிமுகம் செய்தது,
பல update களை முதலில் அறிமுகப்படுத்தியது TVS ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர் வேண்டுகோளுக்கு இணங்க
இப்போது TVS APACHE RTR 2V
தரமான சம்பவம் செய்துள்ளது.
சிறப்பம்சம் என்ன?என்ன?
முதல் முறையாக இதில் Aggressive LED HEADLIGHTS மற்றும் DRL வழங்கபட்டுள்ளது
அதேபோல் புதிய LED TAIL LIGHT கொண்டுள்ளது.
இது இதை தனிச்சிறப்பாக காட்டும்
இது ஸ்மார்ட் எக்ஸ் கனெக்ட் என்ற கனெக்டிங் தொழிற்நுட்பத்துடன் வந்துள்ளது.
இதன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரில் ஒவ்வொரு திருப்பத்திற்குமான நேவிகேஷன், ப்ளூடூத் மூலம் இணைக்கப்பட்டதில் கால்/ எஸ்எம்எஸ்கள் நோட்டிஃபிகேஷன், ரேஸ் டெலிமென்ட்ரி, கியர் போசிஷன் இன்டிகேடர், கியர் ஸிஃப்ட் அசிஸ்ட், லேப் டைமர், க்ராஷ் அலார்ட் சிஸ்டம், க்ளஸ்டர் இன்டன்சிட்டி கண்ட்ரோல் ஆகிய அம்சங்கள் இருக்கிறது. இந்த அம்சம் டிவிஎஸ் அப்பாச்சி பைக்கில் இதுவே முதல் முறை.
2v வரலாற்றில் முதல் முறையாக Apache RTR 160/180 ல் 3 Ride mode ( urban, Rain , sports) கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை RT-Fiஇன்ஜின் உடன் ஏற்கனவே இருந்ததை விட கூடுதல் பவர் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் பின்பக்க டயரும் பெரியதாக கொடுக்கப்பட்டுள்ளது.
அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்கை பொருத்தவரை 5 நிறங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. பியர்ல் ஒயிட், டி க்ரே, க்ளாஸ் பிளாக், ரேஸிங் ரெட், மேட் ப்ளு ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வருகிறது. அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக் பியர்ல் ஒயிட் மற்றும் கிளாஸ் பிளாக் ஆகிய நிறங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக் மொத்தம் 3 வேரியன்ட்களில் விற்பனைக்கு வரவுள்ளது. டிரம் பிரேக் வேரியன்ட், டிஸ்க் பிரேக் வேரியன்ட், மற்றொன்று டிஸ்க் பிரேக் உடன் கூடிய ஸ்மார்ட் கனெக்ட் வேரியன்ட் ஆகிய 3 வேரியன்ட்கள் உள்ளன.
இதில் டிரம் வேரியன்ட் பைக் ரூ1,17,790 ஆகவும், டிஸ்க் பிரேக் வேரியன்ட் விலை ரூ 1,21,290 என்ற விலையிலும் டிஸ்க் உடன் கூடிய ஸ்மார்ட் கனெக்ட் வேரியன்ட் ரூ1,24,590 என்ற எக்ஸ்ஷோரூம் விலைகளில் விற்பனைக்கு வருகிறது.
ஆர்டிஆர் 180 பைக் ஒரே வேரியன்டாக டிஸ்க் உடன் கூடிய ஸ்மார்ட் கனெக்ட் அம்சத்துடன் ரூ1,30,590 என்ற எக்ஸ் ஷோரூம்விலையில் விற்பனைக்கு வருகிறது. இந்த பைக்குகளுக்கான புக்கிங் இன்று முதல் துவங்குகிறது. இந்த பைக் நேரடியாக மார்கெட்டில் பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் பைக்குடன் போட்டி போடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்
கருத்துரையிடுக