பட்ஜெட் சாலை பயணம் செய்பவர்களுக்கு ஏற்றதாக ,கண்டிப்பாக மிஸ் பண்ணக்கூடாத பன்றிமலை!|| திண்டுக்கல் மாவட்டம்|| MK TN BIKER

வணக்கம் நண்பா!!
நான் உங்கள் MK.

பட்ஜெட் சாலை பயணம் செய்பவர்களுக்கு ஏற்றதாக,கண்டிப்பாக மிஸ் பண்ணக்கூடாத பன்றிமலை

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இந்த பன்றிமலை, சுற்றிலும் பசுமை, இதமான வானிலை, லேசான சாரல், இயற்கை எழில் கொஞ்சும் சிறு சிறு சுற்றுலாத் தலங்கள் என அழகு ததும்பும் இடமாக உள்ளது. கொடைக்கானல் என்ன குளிர்ச்சியையும் பசுமையும் கொண்டுள்ளதோ அதே உணர்வை பன்றி மலையும் கொடுக்கும்.
ஊட்டி கொடைக்கானல் போல் இங்கு வணிக ரீதியான சுற்றுலாத்தங்கள் எதுவும் அமைக்கப்படாதது ஒரு விதத்தில் பயணிகளுக்கு உண்மையான இயற்கை சுற்றுலா அனுபவத்தை கொடுக்கும். மிளகுத்தோட்டம், பலாமரங்கள் சூழ்ந்த சாலைகள், காப்பி தோட்டங்கள், ஆரஞ்சு மரங்கள் சூழ்ந்திருக்கும். சாலையில் நிறுத்தி அவற்றின் அழகை ரசிக்கலாம்.
சாலை கொஞ்சம் குறுகலாக தான் இருக்கும் ஆனால் பெரிதாக ட்ராபிக் ஏதும் கிடையாது. இங்கு வாழும் மக்களின் எண்ணிக்கையே குறைவு தான். வரிசையாக மலை கிராமங்கள் தான் அமைந்திருக்கும். அங்கே கிடைக்கும் பசுமையாக காபி கொட்டைகள் கொண்டு காபி அருந்தலாம்.
உள்ளூர் மக்களிடம் விசாரித்தால் காட்டிற்குள் இருக்கும் வாட்ச் டவருக்கு வழி சொல்வார்கள். 1 கிலோமீட்டர் முன்னர் வண்டியை நிறுத்திவிட்டு நடந்து போனால் அங்கே இருந்து சுற்றி உள்ள மலைகளின் அழகை ரசிக்கலாம். அந்த காட்சிக்கு எந்த விலை கொடுத்தாலும் பத்தாது. நண்பர்களோடு சென்றால் இங்குள்ள கிராமத்தின் அருகே முகாம் போட்டு தங்கலாம். புதிய அனுபவத்தைக் கொடுக்கும்.
இயற்கை எழில் கொஞ்சும் பயணம்
காலையில் ஒரு 8 மணிக்கு நீங்கள் பன்றிமலை நோக்கி பயணிக்கலாம். பைக்கில் பயணம் செய்வது மிகவும் உற்சாகமாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மேல் உங்கள் கண்களுக்கே ஒன்னும் புலப்படாது. போகிற வழி முழுக்க இயற்கை அன்னையின் அழகை ரசித்துக் கொண்டே சொல்லலாம். சாலையே தெரியாது. முற்றிலும் பனி மட்டுமே இருக்கிறது. மேகங்கள் உங்களை தொட்டு செல்வதை நீங்களே உணருவீர்கள். போகிற வழியில் சூடாக தேநீர், மசாலா பொறி, கடலை என வெவ்வேறு கிராம பாங்கான உணவுகளை நீங்கள் ருசித்துக் கொண்டே போகலாம். 
நிச்சயம் சுவைக்க மறக்காதீர்கள்.
ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு மேல் போனால் மேகங்கள் உங்களை தொட்டு செல்வதை நீங்கள் உணர்வீர்கள். கடந்து செல்லும் ஊர்களில் எல்லாம் கிராம பாங்கான உணவுகளை நீங்கள் ருசித்துக் கொண்டே போகலாம். அதோடு மிக முக்கியமாக பன்றிமலையில் சூடான சுவையான பரோட்டா கிடைக்கிறது. நிச்சயம் சுவைக்க மறக்காதீர்கள்.
பார்க்க வேண்டிய விஷயங்கள் :
பன்றிமலை முழுவதுமே ஒரு அழகிய சுற்றுலாத் தலம் போல தான் இருக்கிறது. நீங்கள் எங்கு நின்றாலும் அழகிய காடுகள், காபி தோட்டங்கள், குடில்கள், சிறு சிறு ஓடைகள், நீர்வீழ்ச்சிகள் என சுற்றுலா அம்சங்கள் நிறைந்துள்ளன. ஆனாலும் இங்கே நீங்கள் புல்லா வெளி நீர்வீழ்ச்சி, ஆத்தூர் டேம் நீர்வீழ்ச்சி,ஆகியவற்றை கட்டாயம் பார்வையிட வேண்டும்.

பரபரப்பான நகர வாழ்வில் இருந்து சிறு ஓய்வெடுக்க, நண்பருடன் ஒரு ஜாலியான ரைடு போக, உங்கள் மனதுக்கு நெருக்கமானவருடன் ஒரு லாங் பைக் ரைடு போக நீங்கள் இந்த இடத்திற்கு வருகை தரலாம்.

பட்ஜெட் சாலை பயணம் செய்பவர்களுக்கு ஏற்றதாக இருக்கும் இந்த பன்றி மலை அமையும். வார இறுதியில் ஒரு அமைதியான இடத்திற்கு சென்று ஓய்வு எடுத்துவிட்டு ட்ரிப் அடிக்க சிறந்த இடம். அதோடு பன்றிமலையில் இருந்து ஒட்டன்சத்திரம் செல்லும் வழியில் பரபலாறு அணை உள்ளது. நேரம் இருந்தால் அங்கேயும் சென்று வாருங்கள்.

Source _
MK TN BIKER 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்